அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சனி பிரதோஷம்
அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சனி பிரதோஷம் நடைபெற்றது;
அச்சிறுபாக்கம் கோயிலில் சனி பிரதோஷம்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுபாக்கத்தில் தொண்டைநாட்டு சிவத்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்றதுமான புகழ் பெற்ற ஸ்ரீ இளங்காளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.
பால், தயிர், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 24 வகையான சிறப்பு மூலிகை பொருட்களால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர், பிரதோஷ நாயகரான ஸ்ரீ இளங்கிளி, ஸ்ரீ ஆட்சீஸ்வரர் நந்தியம்பெருமான் வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து, மூலவரான ஸ்ரீ ஆட்சீஸ்வரர், ஸ்ரீ இளங்கிளி அம்மனுக்கும் விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.