அச்சிறுப்பாக்கம்: மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
அச்சிறுப்பாக்கம் அருகே தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஊராட்சியில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40,க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட வெளியம்பாக்கம் ஊராட்சியில் மகிழ்ச்சி இல்லம் மற்றும் யுனிவர்சல் எக்கோ பவுண்டேஷன் உமன் சாலிடாரிட்டி பவுண்டேசன் இணைந்து தொடர் மழையில் பாதிக்கப்பட்ட இருளர் இன குடும்பங்களுக்கு பெட்சீட், போர்வை, அரிசி, மளிகை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களான நல உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் மகிழ்ச்சி இல்ல நிறுவனர் அ.பொய்யாமொழி மற்றும் அன்பழகன் வெளியம்பாக்கம், ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார், உட்பட பலர் இருந்தனர்.