அச்சிறுபாக்கத்தில் டாக்டர் அப்துல்கலாம் 90 வது பிறந்த நாள் விழா.
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை கிராமத்தில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது;
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை கிராமத்தில் அப்துல்கலாம் கிரீன் பிளான்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் 90 வது பிறந்தநாள் விழாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள்
90 இடங்களில் மரக்கன்றுகள் செங்கல்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.பி.காசிம் தலைமையில் பாதுகாப்பு வளையம் கொண்டு மரக்கன்றுகள் நடுதல் செய்தனர். இந்நிகழ்வில் சமூக சேவகர் மா.நீலமேகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.எம்.ஷாஜகான், மேல்மருவத்தூர் நியூ பாப்புலர் ஒ.ஐ.வகாப், உட்பட பலர் உடனிருந்தனர்.