படாளம் பகுதியில் திருடப்பட்ட 9 பைக்குகள் மீட்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்ற மாவட்டமாக உருமாறி வருகின்றது. மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களின் முக்கிய ஜங்ஷன் ஆக இது விளங்குகின்றது. இங்கு வாகன பெருக்கங்கள் அதிகரித்து வருவது போல் வாகனங்கள் திருடு போவதும் அதிகரித்து வருகின்றது.படாளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாமண்டூர்,படாளம், புக்கத்துறை, கருங்குழி, நெல்வாய் போன்ற பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் காணாமல் போவதாக காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர் .
அதில் சந்தேகப்படும் படியாக இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அதில் ஒருவர் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும் மற்றொருவர் மதுராந்தகத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 9 பைக்குகள் மீட்கப்பட்டு அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.