காவல் நிலையத்தை கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

மேல்மருவத்தூர் காவல் நிலையத்தை கண்டித்து அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-02-25 01:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்து ராமாபுரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் உணவகத்தில், வழக்கமாக உணவு கடன் வாங்கிய நபர், அதைக்கேட்ட உரிமையாளரை கொலை மிரட்டல் விடுவித்துள்ளார், அத்துடன் அந்த உணவகத்தை 4 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 16ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் இதுவரை மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மதுராந்தகம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மேல்மருவத்தூர் காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் மேல்மருவத்தூர் காவல் நிலையம் எதிரே கண்டன கோஷமிட்டனர்.

Tags:    

Similar News