மதுராந்தகத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் வாயில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டலம் கிராமத்தில் அனைத்து கட்சி சார்பில் டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி சாவு மேளம் அடித்து தண்டலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழும் நூதன போராட்டம் நடைபெற்றது.