மதுராந்தகத்தில் அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி, நாய்கடி, பேய்க்கடி போன்ற எல்லா கடிக்கும் மருந்து உள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நகைச்சுவையாக பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டரை, கடலூர், கொடூர், பெரும்பாக்கம், உள்ளிட்ட நான்கு கிராமங்களில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பெரும்பாக்கம் கிராமத்தில் மினி கிளினிக்கை திறந்து வைத்து அமைச்சர் பேசுகையில் தமிழகத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை திறக்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திறக்கப்பட்டுள்ளது.
அம்மா மினி கிளினிக்கில் பாம்புகடி, நாய்க்கடி, பேய்க்கடி,என எல்லா கடிக்கும் மருந்துகள் உள்ளது என்றார். பிறகு பொது க்களை பார்த்து பேய்கடி உள்ளதா என கேள்வி எழுப்பினார் . கடிகள் பற்றி கூறும் பொழுது தவறி வந்து விட்டதாக கூறினார். அமைச்சர் பேச்சால் பொதுமக்களுக்கு நகைச்சுவை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.