மதுராந்தகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

Update: 2021-02-11 07:45 GMT

மதுராந்தகம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன்எண்டத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் வட்டார மருத்துவ அலுவலர் ப்ரியா மற்றும் கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் ஆகியோரை தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட 56 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

சுகாதார அலுவலர்கள் இது குறித்து கூறுகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களுக்கு எந்தவித தயக்கமும் வரக்கூடாது என்பதற்காக சுகாதாரம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மருந்தைச் செலுத்திக் கொள்கிறோம். மேலும் படிப்படியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறினர்.

Tags:    

Similar News