கொரொனா தொற்று காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பர்மா, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற 18க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்ண நாரை கூழைக்கடா, பாம்புத்தாரா மிளிர் உடல், அரிவாள் மூக்கன், ஊசிவால் வாத்து என 26 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம்.இதை பார்ப்பதற்கு காணும் பொங்கலை முன்னிட்டும் இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதாலும் சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள்.
தமிழகத்தில் கொரொனா தொற்று காரணமாக மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா என பல்வேறு சுற்றுலா தலங்களில் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு மட்டும் அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக இதுவரை 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். வேடந்தாங்கல் ஏரியில் தற்போது 16 ஆயிரம் பறவைகள் வருகை தந்துள்ளன.