மழையால் பாதித்த இருளர் மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் நிவாரண உதவி
கல்பாக்கம் அருகே, மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு, தனியார் கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் மற்றும் குடி பேரம்பாக்கம் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர், இதனை அறிந்த, குரல் ஒலிக்கட்டும் இனி, என்ற மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட தொண்டு நிறுவனத்துடன், கேளம்பாக்கம் தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து, நிதி திரட்டி சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவில், மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு, பாய், போர்வை, பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட இருளர் இன மக்கள், உதவி செய்த மாணவர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.