மதுராந்தகத்தில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுராந்தகத்தில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனம் திருட்டு நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2021-07-16 09:15 GMT
மதுராந்தகத்தில்  தொடர் இருசக்கர வாகனம் திருட்டு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பைல் படம்

  • whatsapp icon

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில்  பல்வேறு திருட்டு சம்பங்கள் நடைபெற்று வருகிறது.

மேல்மருவத்தூரில் நேற்று நான்கு இருசக்கர வாகனங்களும், அச்சிறுபாக்கத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களும், மதுராந்தகத்தில் ஒரு இரு சக்கர வாகனமும் மற்றும் ஒரு மினிவேனும்  திருடப்பட்டது.

அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தம்பதியரிடம் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது ஐந்து சவரன் தாலி செயின் பறிப்பு போன்ற தொடர் திருட்டுக்கள் இப்பகுதியில் அரங்கேறி வருகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த தொடர் திருட்டு காரணமாக இதுவரை எந்த காவல் நிலையத்திலும் வாகனங்களை பறிமுதல் செய்ததோ கொள்ளையர்களை கைது போன்ற எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

மேலும் பேசிக்கொண்டு இருக்கும் நபர்களிடம் இருந்து செல்போன் பறிப்பு சம்பவமும் அரங்கேறி வருகிறது இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News