திடீர் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி
செய்யூர் அருகே திடீர் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக உயரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள நெமந்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செங்கேணி ( வயது54 ) இவர் வழக்கம் போல் விவசாய வேலைக்கு தனது வயல் வெளிக்கு சென்றார். அப்போது திடீர் மழை பெய்ததால் கம்பத்தில் இருந்த மின் வயர் பப்பாளி மரம் மீது விழுந்ததில் மின் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலயே விவசாயி செங்கேணி பலியானார். இந்த சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.