செய்யூர்: நியாய விலை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
தேன்பாக்கம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவுக்கு உட்பட்ட தேன்பாக்கம் ஊராட்சியில் நியாய விலை கடை இயங்கி வருகிறது.
இந்த கிராமத்தில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நியாயவிலை கடையில் 384 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த சில மாதங்களாக அரிசி, எண்ணெய், சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, உள்ளிட்ட பொருள்கள் சரிவர வழங்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நியாயவிலைக் கடைகள் சரியாக திறக்கப்படுவது இல்லை எனவும், பொருட்கள் மொத்தம் முழுவதுமாக வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 70 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர் முறையாக பொருட்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் 50 பெண்கள் உட்பட 100 பேர் பங்கேற்றனர்.