ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு திடீர் ஆய்வு!

செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-02 15:03 GMT

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொலம்பாக்கம் அரசு சுகாதார நிலையம், கயப்பாக்கம் அரசு சுகாதார நிலையம், சூனாம்பேடு அரசு சுகாதார நிலையம், இடைக்கழிநாடு அரசு சுகாதார நிலையம் ஆகிய 4 சுகாதார நிலையங்களுக்கு செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு திடீர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் கொரோன வைரஸ் பரிசோதனை எத்தனை பேருக்கு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்படுகிறதா எனவும், அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரையும் வலியுறுத்தி தடுப்பூசி போட வைத்தார்.

பொலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்களிடம் சென்று 45 வயதிற்கு மேற்பட்டோர் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு  கேட்டுக்கொண்டார். அதன் பின்னர், கயப்பாக்கம், சூனாம்பேடு, இடைக்கழிநாடு ஆகிய சுகாதார நிலையங்களுக்கு சென்று வட்டார மருத்துவ அலுவலர்களிடம் தற்போது உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், தேவைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் கொரோன வைரஸ் பரிசோதனைகளை தீவிரபடுத்துங்கள் மற்றும் நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள செய்யூர், பவுஞ்சூர், அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்குமாறு மருத்துவ அலுவலர்களிடம் சட்ட மன்ற உறுப்பினர் பாபு வலியுறுத்தினார்.

Tags:    

Similar News