செய்யூர்: கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
செய்யூர்: கள்ளச்சாராய வியாபாரி மீது போலீசார் குண்டர் சட்டத்தல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள ஓதியூர் பகுதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் வயது 48 இவர் ஓதியூர் பகுதியில் உள்ள சமுதாய கூடம் பின்புரம் சட்டவிரோதமாக தொடர்ந்து கள்ளச்சாரயம் விற்றுவந்துள்ளார்.
இது குறித்து தொடர் புகார்கள் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலில் பேரிலும், மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் பன்னீர் செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.