நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு; மாவட்ட எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் மனு

மதுராந்தகம் அருகே நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்;

Update: 2021-07-20 11:30 GMT

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எடையாளம் கிராமத்தில் விநாயகர் கோவில் மற்றும் அதன் அருகே அல்லி குளம் அரசுக்கு சொந்தமான கோவில் நிலம் உள்ளது. இதன் அருகே அரசுக்கு சொந்தமான ஏக்கம் நிலங்களை, அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் அவரது மனைவி செங்கேணி அம்மாள் ஆகிய இருவரும் ஆக்கிரப்பு செய்துள்ளனர்.

மேலும், சில அரசு அதிகாரிகளின் துணையுடன்  சுமார் 10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமார் 20 சென்ட் குளத்தின் நீர்பிடிப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கூரை கொட்டகை அமைத்துள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது குமார் மற்றும் செங்கேணி அம்மாள் ஆகிய இருவரும் தங்களை பொதுமக்கள் அச்சுறுத்துவதாக காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை முன் வைத்தனர். பின்னர், கோட்டாட்சியர் அப்பகுதியில் உள்ள நிலத்தை  உரிய அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப்பின், தரை கொட்டகை அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதை அதிகாரிகள் நில அளவை செய்து உறுதிப்படுத்தினார். உடனடியா அனைத்தையும் அகற்ற வேண்டுமென அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், அப்பகுதியில் தற்போது வரை அந்த கொட்டகை அகற்றப்படாத நிலையில், அப்பகுதி பெண்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குமார் மற்றும் செங்கேணி அம்மாள் ஆகிய இருவரும் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குமார் மற்றும் செங்கேணி அம்மாள் ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு நிலத்தை மீட்டு அல்லி குளத்தை சுற்றி பூங்கா அமைக்கவும்,  நீர்ப்பிடிப்பு நிலங்களாக மாற்றி அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கவும் பொது மக்களிடையே சமூக நீதியை பாதுகாக்கவும்  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Tags:    

Similar News