செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் ரூ,7.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கல்
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் ரூ,7.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.;
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1430 பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் பரிசீலனை செய்யப்பட்ட மனுக்கள் அடிப்படையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
செய்யூர் வட்டாட்சியல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூபாய் 7.6 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் வாசுதேவன் செய்யூர் வருவாய் வட்டாட்சியர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.