செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தில் அம்பேத்கருக்கு புதிய சிலை
செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து அந்த இடத்தில் புதிய சிலை அமைக்கப்பட்டது;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் அம்பேத்கர் சிலை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை ஏப்ரல் 3.1998 அன்று திறந்து வைத்தார்.
இந்த அம்பேத்கர் சிலை செப்டம்பர் 2ஆம் தேதி சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது. இரும்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரபாபு, மாநில துணை பொது செயலாளர் எழில்கரோலின், மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக அம்பேத்கர் சிலை ஒன்றை அதே இடத்தில் புதிதாக அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு 24 மணி நேரத்தில் புதிய சிலையை அமைத்தனர்.
அந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தமிழினி, மண்டல அமைப்பு செயலாளர் விடுதலைசெழியன், செய்யூர் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பொன்னிவளவன், சித்தாமூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அந்த நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செல்போன் வழியாக தொடர்புகொண்டு புதிய சிலை வைப்பதற்கான முயற்சி மேற்கொண்டதற்கு பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வில் கிராம இளைஞர்கள் பெண்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த முன்னோடிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.