மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து ஊருக்கு வழியனுப்பிய எம்எல்ஏ
வடமாநில மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து சொந்த ஊருக்கு செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு வழியனுப்பி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் லிட்டில் ஹார்ட்ஸ் மனநலம் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு மையத்திலிருந்து வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வழியனுப்பும் விழா நடைபெற்றது.
கடப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் லிட்டில் ஹார்ட்ஸ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து வழிதவறி தமிழகத்திற்கு வந்தவர்களை ஒப்படைக்கப்படுவார்.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த 28 நபர்களுக்கு மன நல சிகிச்சை மற்றும் தொடர் பராமரிப்புக்கு பின்னர் இயக்குனர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வழிகாட்டுதலின் படி ராஜஸ்தானில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு ரயில் மூலம் வழியனுப்பும் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் லிட்டில் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவன வளாகத்தில் இருந்து புறப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட 28 நபர்களுக்கும் செய்யூர் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, 28 நபர்களுக்கும் ரொட்டி ,பிஸ்கட் ஆகியவற்றை வழங்கி சென்னைக்கு செல்லும் வேனை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இலத்தூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, இடைக்கழிநாடு பேரூராட்சி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் லோகு, பேரூர் துணை செயலாளர் மூர்த்தி, ரவிக்குமார், புருஷோத்தமன் மகேந்திரன், சதீஷ்குமார், ரவிக்குமார், தரணிஷ்குமார், வேலு, தணிகைவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்