அச்சிறுப்பாக்கத்தில் வேட்பாளர் மல்லை சத்யா வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுப்பாகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2021-03-30 16:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மல்லைசத்யா அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கிராம பகுதியில் திறந்த வேனில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இராமாபுரம், ஒட்டக்கோயில்.ஒரத்தூர்,பசுவங்கரணை, கிளியாநகர் ,உள்ள அனைத்து பகுதிகளுக்கும் திறந்த வேனில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மல்லைசத்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது அச்சிறுப்பாக்கம் வடக்கு திமுக செயலாளர் தம்பு மற்றும் ஓரத்தூர் கிளை செயலாளர் வெங்கடேசன். திமுக பகுதி நிர்வாகிகளும். மதிமுக பகுதி நிர்வாகிகளும். காங்கிரஸ் கட்சி பகுதி நிர்வாகிகளும். விடுதலை சிறுத்தை கட்சி பகுதி நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News