கல்பாக்கம் அருகே மாசி மக தீர்த்தவாரித் திருவிழா- பக்தர்கள் வழிபாடு
கல்பாக்கம் அருகே மாசி மக தீர்த்தவாரித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில், இன்று நடைபெற்ற, 23ம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரித் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில், 23ம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரித் திருவிழா, இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராமங்களில் இருந்து முக்கிய ஆலயங்களின் உற்சவர்கள், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள் உற்சவர், கடலில் புனித நீராடப்பட்டது. ஸ்வாமி புனித நீராடிய கடல் நீரில் பக்தர்கள் புனித நீராடி, பின்னர் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.