விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்;
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடப்பாக்கம், சித்தாமூர், இலத்தூர், ஒன்றியம் உள்ளிட்ட இடங்களில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் இரா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்தும், தடையை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என கோரியும் காசி விஸ்வநாதர் ஆலயம் ,துர்க்கைஅம்மன் ஆலயம், ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோயில்கள் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழா நடப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று இந்து ஆலயஙகளுக்கு முன்பாக பிரார்த்தனை செய்தனர். இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.