வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வல்லிபுரம் பாலாற்று பாலம்

வல்லிபுரம் பாலாற்று பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது; இதனால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-25 08:30 GMT

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வல்லிபுரம் பாலாற்று பாலம்.

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில்,  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திறந்துவிடப்பட்ட, ஆற்றுநீர் பாலாற்றில் கலந்து பெருவெள்ளமாக மாறி,  பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக,   1953 ல் கட்டப்பட்ட பாலம்,  ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பாலம் காணாமல் போயுள்ளது. இதனால் திருக்கழுக்குன்றத்தில் இருந்து மதுராந்தகம் வரையிலான இடைப்பட்ட, சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வழியாக சுமார் 50  கிலோமீட்டர் சுற்றி, பள்ளிகளுக்கும், வேலைகளுக்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் செல்ல வேண்டிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த தரை பாலத்தை மேம்பாலமாக அமைத்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News