பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ராஜஸ்தானில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு புதுப்பட்டினம் ஊராட்சி சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-01-05 13:00 GMT

பளுதூக்கும் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அகில இந்திய அளவிலான 31 ஆம் ஆண்டு பலுதூக்கும் போட்டி ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டம் ஐ.ஐ.டி வளாகத்தில் நடைப்பெற்றது.இதில் இந்தியாவில் இருந்து 20 மாநிலங்களை சேர்ந்த 14 வயது முதல் 80 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என 600க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

இதில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த 5 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். 400 கிலோ எடை பிரிவு,115 கிலோ எடைப் பிரிவு, 170 கிலோ எடைப் பிரிவு என போட்டிகள் நடைப்பெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்த முஸ்தக் 1தங்கம், 1 வெள்ளி, இரு வெண்கல பதக்கமும் பெற்றார். ஆசிப், அர்ஷத் ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கமும் பெற்றனர். இந்திய அளவில் வலுதூக்கும் போட்டியில் 6 பதக்கங்களை பெற்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு புதுப்பட்டினத்தில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ - ம .தனபால் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைத்து கட்சியினர் திரளாக கலந்துக் கொண்டு வெற்றி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News