சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை தெற்கு காவல் துறை சார்பில், சோழிங்கநல்லூர் கடற்கரை சாலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.;

Update: 2021-12-13 03:15 GMT

சைக்கிள் பேரணியில் காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் சைக்கிள் ஓட்டிய வந்தார். 

போதைப் பொருள் பாதிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை தெற்கு காவல் துறை சார்பில், சோழிங்கநல்லூர் கடற்கரை சாலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணியை, காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் சைக்கிள் ஓட்டிச் சென்று, தொடங்கி வைத்தார்.

இதில்,  அடையாறு பொறுப்பு துணை ஆணையாளர் மனோகரன், நீலாங்கரை உதவி ஆணையாளர் சுதர்சன், குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள்,  சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News