ரேஷன் கடைகளில் குவியும் கூட்டம் கேள்வி குறியாகும் சமூக இடைவெளி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பூதூர் பகுதியில் நியாய விலை கடையில் பலர் முக கவசம் அணியாமலும் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமலும் இலவச நிவாரண நிதி பொருட்கள் வாங்க முயற்சிப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-06-27 07:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பூதூர் பகுதியில் நியாய விலை கடையில் பலர் முக கவசம் அணியாமலும் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமலும் இலவச நிவாரண நிதி பொருட்கள் வாங்க முயற்சிப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் தற்போது குறைந்து வந்ததால் முழு ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பூதூர் கிராமத்தில் நியாய விலை கடையில் விலையில்லா பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்காமல் பலர் முக கவசம் அணியாமல் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும் தள்ளிக் கொண்டும் பொருட்களை வாங்க நிற்பதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

என சமூக ஆர்வலர்கள் மிகுந்த அச்சம் கொள்கின்றனர். மேலும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News