செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடரும் கொலைகள் பயத்தில் பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.;
கொலை செய்யப்பட்ட மீனவர் குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார்
செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பகுதியில் கடந்த வாரம் நடந்த கொலைக்கு பழிக்கு பழிவாங்க இன்று இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேந்தவர் ரமேஷ் வயது 26 இவர்மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல் நிலையங்களில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு வழக்கு தொடர்பாக புதுச்சேரி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ், கடப்பாக்கம் மீனவர் குப்பத்தில் உள்ள தனது உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்ற போது, மர்ம நபர்கள் ரமேஷை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 4பேரை பிடித்து சூனாம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொலையுண்ட ரமேஷ் தங்கி இருந்த இடத்தை கொலையாளிகளிடம் காட்டிகொடுத்ததாக கூறப்படும் அவரது நன்பர் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வயது,23 இன்று காலை மர்ம நபர்காளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அங்கு வந்த சூணாம்பேடு காவல்தூறையினர் உடகலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில், ரமேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருப்பதாகவும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்தூறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடரும் தொடர் கொலைகளால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.