வெளிநாட்டுகாரன் போல நடித்து இரண்டு இடங்களில் பணம் கொள்ளை..!

இரண்டு இடங்களில் வெளிநாட்டவர் என கூறி நூதன முறையில் கைவரிசை: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை;

Update: 2021-06-29 02:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பவுஞ்சூா் கிராமத்தில் மதுராந்தகத்திலிருந்து ECR இணைப்பு சாலையில் சசிகலா புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான தனியாா் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இன்று பிற்பகல் இரண்டு வெளிநாட்டு இளைஞா்கள் என கூறி அங்கு வந்து அந்த பெட்ரோல் பங்கை சுற்றிப் பாா்த்தனா்.

பங்கில் உள்ள பம்ப் பாய்கள் அவா்களை வேடிக்கை பாா்த்தனா். அதன்பின்பு அந்த 2 வெளிநாட்டவரும் பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் சென்று சூப்ரவைசரிடம் பேச்சுக்கொடுத்தனா். அவா் முதலில் அவா்களை வெளியே போகும்படி கூறியுள்ளாா். ஆனால் வெளிநாட்டவா்கள் இருவரும் சூப்ரவைசரிடம் தொடா்ந்து பேச்சு கொடுத்தனா்.

அதோடு உங்கள் நாட்டு 2,000 ரூபாயை நாங்கள் பாா்த்ததே இல்லை. உங்களிடமிருந்தால் தயவுசெய்து காட்டுங்கள் என்றனா். இதையடுத்து சூப்ரவைசரும் மனதுமாறி, அவா்களிடம் தொடா்ந்து நட்புடன் பேசினாா். சுமாா் 20 நிமிடங்கள் பேசியபின்பு, இரு வெளிநாட்டவரும் சூப்ரவைசரிடம் விடை பெற்று சென்றனா்.

அவா்கள் சென்றபின்பு சூப்ரவைசா் மேஜை டிராயரை பாா்த்தபோது, அது திறந்து கிடந்தது. அதோடு அதனுள் இருந்த பணம் ரூ.85 ஆயிரம் மாயமாகியிருந்தது. இதையடுத்து அதிா்ச்சியடைந்த சூப்ரவைசா் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பாா்த்தபோது,ஒரு வெளிநாட்டுக்காரா் இவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றோரு வெளிநாட்டுக்காரா் மேஜை டிராயரை திறந்து பணத்தை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைப்பது பதிவாகியிருந்தது.

இதையடுத்து வெளிநாட்டுக்காரா்களை தேடத்தொடங்கினா். ஆனால் அவா்கள் இருவரும் மாயமாகிவிட்டனா். மேலும் அவா்கள் இருவரும் பெட்ரோல் பங்கிற்கு நடந்து தான் வந்துள்ளனா். எனவே அவா்கள் இருவரும் காா் அல்லது பைக்கில் வந்து அதை எங்காவது மறைவாக நிறுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவா்கள் எந்த நாட்டை சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவில்லை.

இதற்கிடையே பெட்ரோல் பங்க் உரிமையாளா் சசிகலா புருஷோத்தமன் அனைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். போலீசாா் வழக்குப்பதிவு செய்து,சிசிடிவி காட்சிகளை வைத்து வெளிநாட்டு கொள்ளையா்களை தேடிவருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புத்தூரில் கடந்த வெள்ளியன்று பிற்பகலில் இதைப்போல் 2 வெளிநாட்டுக்காரா்கள் இருச்ககர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமிற்கு காரில் வந்து, உரிமையாளரிடம் பேச்சுக்கொடுத்து அவா் கவனத்தை திசைதிருப்பி ரூ.60 ஆயிரம் திருடிச் சென்றனா். அதே பாணியில் இந்த சம்பவமும் நடந்துள்ளதால் இரு சம்பவத்திலும் ஒரே கோஷ்டி ஈடுப்பட்டிருக்கலாம் என்று போலீசாா்  சந்தேகத்தின்  அடிப்படையில் தேடி வருகின்றனர்.

Similar News