அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு;

Update: 2021-05-27 12:28 GMT

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மேட்டு காலனியில் கொரோனா தடுப்பூசி முகாமை பேரூராட்சிகள் இயக்குனர் குருராஜன் ஆய்வு செய்தார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டு காலனி பகுதியில் நடைபெற்ற கொரோன தடுப்பூசி முகாமில் பேரூராட்சிகளின்  உதவி இயக்குனர் குருராஜன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சங்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் எத்தனை பேர்  கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மேலும் எத்தனை தடுப்பூசிகள் தேவைப்படும், கிராமப்புற பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் கேட்டறிந்தனர்.

Similar News