2 தலையுடன் பிறந்த கன்றுகுட்டி; காணக் குவிந்த மக்கள்
செய்யூரில் இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் பிறந்த அதிசய கன்றுகுடியை காண மக்கள் குவிந்து வருகின்றனர்.;
இரு தலைகளுடன் பிறந்த கன்று.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு அருகே மணப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயி ஒருவரின் இல்லத்தில் இன்று பசு பெரிய கன்று ஒன்றை ஈன்றது.
அந்த கன்றானது இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் இரண்டு வாய் உள்ளதால் அதிசயமான அந்த கன்றைக்கண்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
அந்த கன்றுக்கு இரண்டு வாய் உள்ளதால் அங்கு வந்த சிலர், எந்த வாயில் உணவை அருந்தும் என்ற வியப்புடன் கேள்விகளையும் கேட்டவாறு சென்றனர். இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் இருந்த கன்றை பார்ப்பதற்கு ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.