போரூராட்சி தேர்தலில் ஏலம்: செய்யூர் அருகே கடப்பாக்கம் மீனவர் கிராமத்தில் பதற்றம்
பேரூராட்சித் தேர்தலில் செய்யூர் அருகே கடப்பாக்கம் மீனவர் கிராமத்தில் பதற்றம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட தண்டுமாரியம்மன் குப்பம் உத்துகாட்டம்மன் குப்பம் பகுதிகள் சேர்ந்து 14வது வார்டாக உள்ளது. இங்கு தண்டுமாரியம்மன் குப்பத்தில் 700 வாக்குகளும் ஊத்துக்காட்டு அம்மன் குப்பம் 500 வாக்குகள் உள்ளது.
இதனை அடுத்து இடைக்கழிநாடு நகர்ப்புற தேர்தலில் தண்டுமாரியம்மன் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ரூ. 24 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ளனர். இதற்கு ஊத்துக்காட்டம்மன் பகுதியை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடமன் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் எங்கள் வார்டின் ஊத்துக்காட்டம்மன் பகுதியை தனியாக அமைக்கவில்லை என்றால் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, வாக்காளர் அட்டை ரேஷன்அட்டை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு, நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். இதனால் கடப்பாக்கம் ஊத்துக்காட்டம்மன் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.