மதுராந்தகம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

மதுராந்தகம் அருகே12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்;

Update: 2021-07-07 05:00 GMT

அஜித்குமார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் அஜித்குமார் வயது(29) தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ரேஷன் கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஊருக்கு அருகே உள்ள தைலமர தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் சில நாட்களாக இந்த சிறுமி குடும்பத்திலுள்ளவர்களிடம் ஏதும் பேசாமல் மௌனமாக இருக்கவே சந்தேகப்பட்ட சிறுமியின்  தாய் அந்த சிறுமியை விசாரிக்கும் பொழுது அஜித்குமார் தன்னை தைலமர தோப்பில் பாலியல் பலாத்காரம் செய்ததை தாயிடம் கூறினார்.

அதன் பேரில் பெண்ணின் தாய் கொடுத்த புகாரில் அஜித்குமார் மீது மேல்மருவத்தூர் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News