செய்யூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் சாலைமறியல் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தனி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத்திற்கு அதிமுக தலைமை கழகம் செய்யூர் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தாமூர் ஒன்றியம் மேற்கு, கிழக்கு, இடைக்கழிநாடு, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மூன்றாவது நாளாக செய்யூரை அடுத்த வெண்ணாங்குபட்டு கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வேட்பாளரை மாற்றி டாக்டர் பிரவின்குமாரை வேட்பாளராக அறிவிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.