இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம்

Update: 2021-02-09 04:30 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில், செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் பகுதிகளில் இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சிக்னோரா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்களான சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான 7 இடங்களின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.இந்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துக்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் தமிழ்நாடு அரசுக்கே சொந்தம் எனவும் இந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் பகுதியில் 7 இடங்களில் உள்ள சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் சில சொத்துக்களை அரசு கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான செங்கல்பட்டு, செய்யூர் பகுதியில் உள்ள சொத்துக்கள் தற்போது முதல்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தற்போது அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News