சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேட்டி

சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார்.

Update: 2021-12-02 14:11 GMT

சென்னை விமானநிலையத்தில் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு சீரடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒமிக்கிரான் வைரஸ் தமிழகத்தில் வந்ததாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. பொது சுகாதார துறை மூலமாக தகவல் வந்ததால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.  முதலமைச்சர் பொது சுகாதார துறை நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பார்.

மழைக்காலத்தில் தொற்று வியாதிகள் இருப்பது தான். பள்ளிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கல்வி முதன்மை அலுவலர்கள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி வகுப்பறையில் யாரையும் அமர்த்த கூடாது. அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News