செங்கல்பட்டில் கடும் வாகன நெரிசல்- பொதுமக்கள் அவதி

Update: 2021-01-17 04:45 GMT

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகமானோர் திரும்பியதால் செங்கல்பட்டில் 2 மணி நேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.எனவே சென்னையில் பணிபுரியும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு இன்று சென்னை திரும்பினர். அதிகமானோர் ஒரே நேரத்தில் வந்ததால் செங்கல்பட்டில் உள்ள சுங்கசாவடியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. சுங்கச்சாவடியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததாலும், சங்கச்சாவடி ஊழியர்கள் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய கட்டணம் வசூலிப்பதாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் சில வாகனங்கள் விதிமுறைகளை மீறி எதிரும் புதிருமாக சென்றதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தென் மாவட்டங்களுக்கு சென்ற லட்சக்கணக்கான வாகனங்கள், கடந்த இன்று அதிகாலை முதல் சென்னை திரும்புகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் போதவில்லை. இதையொட்டி செங்கல்பட்டில் இருந்து வண்டலூர், தாம்பரம் செல்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் ஆகிறது. பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். 6 வழியிலிருந்து 8 வழியாக அதிகரிக்க வேண்டும். வாகனங்கள், பைக் செல்ல தனித்தனியாக அனுமதிக்கவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News