மது பாட்டில்களை கடத்தி சென்ற வாலிபர் கைது
காவல்துறையினர் நீலகண்டன் கடத்தி சென்ற 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்துயுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மூட்டையோடு சென்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்துபோது அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் செங்கான் பகுதியில் வசிக்கும் நீலகண்டன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் மது பாட்டில்களை ஸ்ரீபுரத்தான் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நீலகண்டன் கடத்தி சென்ற 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்துயுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்களை கடத்தி சென்று விற்பனை செய்த குற்றத்திற்காக நீலகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.