ஜெயங்கொண்டம் அருகே பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

மனைவி சாவில் சந்தேகம் இருப்பதக கூறி நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-03-19 07:23 GMT

பூங்கொடி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வடகடல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். நடராஜன் வழக்கம்போல் வேலை நிமித்தமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடராஜன், பூங்கொடிக்கு போன் செய்துள்ளார். ஆனால் பூங்கொடி போனை எடுக்க வில்லை.

இதனால் நடராஜன் உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தாழ்வாரத்ததில் சேலையால் தூக்குப் போட்ட நிலையில் பூங்கொடி தொங்கியதை கண்டு நடராஜன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூங்கொடியின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பதிரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, தனது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதக கூறி நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து பூங்கொடியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News