அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் பரவலாக கனமழை

Heavy Rain Today - அரியலூர் மாவட்டத்தில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து பூமிகுளிர்ந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

Update: 2022-08-24 07:41 GMT

Heavy Rain Today -அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மதிய வேளையில் திடீரென திரண்ட மேகங்களால் கனமழை பெய்தது. இந்த மழையானது அரியலூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உடையார்பாளையம், தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் காற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் சாலை ஓரங்களில் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் ஓடி குளம் குட்டை ஏரிகளில் சென்றடைந்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News