அரியலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து பாட்டி பலி- பேரன் படுகாயம்

அரியலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து பாட்டி பலியானார். 9 மாத கைக்குழந்தையான பேரன் படுகாயம் அடைந்துள்ளான்.;

Update: 2021-11-22 11:01 GMT

மண்சுவர் இடிந்து விழுந்ததில் உரியிழந்த செல்வி.

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் காமராசு. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு  கமலேஷ் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. காமராசுவின் தாயார் செல்வி.

இன்று காலை 10 மணி அளவில் ஆடுகளை கொட்டகையில் பிடித்து கட்டுவதற்காக செல்வி தனது பேரன் கமலேஷை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மண் சுவர் இடிந்து விழுந்ததில் செல்வி மற்றும் பேரன் கமலேஷ் சுவற்றின் அடியில் சிக்கி கொண்டனர். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டனர்.

படுகாயம் அடைந்த செல்வி மற்றும் பேரன் கமலேஷ் ஆகியோரை அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் செல்வி மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


படுகாயமடைந்த பேரக்குழந்தை  கமலேஷ் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News