மழையால் இரண்டு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் மழையில் நனைந்த வீட்டின் சுவர் இடிந்து மற்றொரு வீட்டின்மீது விழுந்தது.

Update: 2021-08-10 04:11 GMT

மதனத்தூர் காலனி தெருவில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து மற்றொரு வீட்டின் மீது விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக இரு குடும்பத்தினர் காயமின்றி உயிர்தப்பினர்.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி மதனத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென மழை பெய்தது. மழையின் காரணமாக மாசிலாமணி வீட்டின் ஒரு பக்க செங்கல் சுவர், மழை ஈரத்தில் ஊறி நேற்று இரவு இடிந்து வெளிப்புறமாக சாய்ந்து விழுந்தது.

இதில் அந்த சுவர் அருகில் உள்ள வேல்முருகன் என்பவரின் வீட்டு சுவற்றின் மீது விழுந்ததில், அந்த வீட்டின் சுவரும் இடிந்தது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் காயமின்றி உயிர்தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன், சேதமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தார்.

Tags:    

Similar News