ஜெயங்கொண்டம் அருகே பாதை அமைத்துத்தரக்கோரி கிராம மக்கள் முற்றுகை

ஜெயங்கொண்டம் அருகே பாலத்தை அடைத்துவிட்டு பாதை அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் ஒப்பந்ததாரரிடம் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-13 07:04 GMT

கரடிகுளம் கிராம மக்கள் பாலத்தை அடைத்துவிட்டு பாதை அமைத்துத் தர கேட்டு  ரோடு காண்ட்ராக்ட்டரிடம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்திலிருந்து சூசையப்பர்பட்டினம் வழியாக சூரியமணல் செல்லும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை (பைபாஸ்) சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு கரடிகுளம் கிராம மக்களின் விளைநிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தராமல் சாலை பணி நடைபெறுவதால் கரடிகுளம் கிராம மக்கள் வேலையை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து தாங்களின் விளைநிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி கேட்டு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வேலையை தடுத்து நிறுத்தி ரோடு காண்ட்ராக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, விளைநிலங்களுக்கு செல்ல தற்போது போட்டுள்ள நீர்வரத்து மதுகை அடைத்துவிட்டு கரடிகுளத்தில் இருந்து வயல்வெளிக்கு செல்ல நேரடியாக பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வேலைகளை செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News