ஓலையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சிறப்புரை
ஓலையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஓலையூர் ஊராட்சியில் 75 -வது சுதந்திர தின அமுத பெருவிழாவை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நாராயணன், உதவி வேளாண்மை இயக்குனர் ராஜலெட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் குமாரி சுப்பிரமணியன், ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.