வானதிரையன்பட்டினம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Draupadi Amman Temple Timithi Festival

Update: 2022-06-14 16:06 GMT

வானதிரையன்பட்டினம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில்  தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

வானதிரையன்பட்டினம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா; தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிரையன் பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, அம்மன் பிறப்பு, திருக்கல்யாணம், குறவஞ்சி நாடகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று அம்மன் வீதி உலா வலம் வந்தது.

இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பத்தர்கள் விரதமிருந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.இந்த நிகழ்வில் உடையார்பாளையம், வாணதிரையன்பட்டினம், நாயகனைப்பிரியாள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாமைகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News