ஜெயங்கொண்டம் அருகே ஒரே தெருவில் இரண்டு வீட்டில் கொள்ளை முயற்சி
ஜெயங்கொண்டம் அருகே ஒரே தெருவில் இரண்டு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60).இவரது மனைவி கீதா. இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் சந்திரகுமார் 32 மனைவி சூர்யா இருவரும் சவுதி அரேபியா நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவர் தன் மகளைப் பார்ப்பதற்காக சென்னை சென்று பத்து நாட்கள் ஆகின்றன. இதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் சுற்றி வைத்துள்ள கேமராவை அணைத்து வைத்து வீட்டின் பின்புறம் கதவை உடைத்தது தெரியவந்துள்ளது.
அதே தெருவைச் சேர்ந்த அண்ணாமலை ஓய்வு பெற்ற ஆசிரியர் மகன் அருள்மணி (52). அம்மா பட்டம்மாள் (70) இவர்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். நேற்றிரவு ஜெயங்கொண்டம் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்ததை கண்டு பட்டம்மாள் அதிர்ந்து போனார். அருகில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இரண்டு வீட்டிலும் திருடிச்செல்லும் அளவிற்கு நகைகளோ, பொருள்களோ இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.