வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு, காவல் துறையினருக்கு பயிற்சி.

சென்னை மாநில பேரிடர்மீட்பு குழுவினர் மூலம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பயிற்சி.

Update: 2021-08-25 10:10 GMT

உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில், வடகிழக்கு பருவ மழையில் பாதிப்புகள் ஏற்படும் பொழுது பொதுமக்களை காப்பாற்றும் வகையில், சென்னை பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம், அரியலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


சென்னை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் அரியலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு பயிற்சி அளிக்கப்பட்டது 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், வேலப்ப செட்டி ஏரியில், சென்னை பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம், வரும் வடகிழக்கு பருவ மழையில் பாதிப்புகள் ஏற்படும் பொழுது பொதுமக்களை காப்பாற்றும் வகையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த 23 தேதி ஆயுதப்படை மைதானத்தில் துவங்கிய பயிற்சி வகுப்பு  நிறைவு நிகழ்ச்சி , உடையார்பாளையத்தில் உள்ள வேலப்ப செட்டி ஏரியில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களில் இருந்து, பொது மக்களை பாதுகாக்கும் வகையில், படகு மற்றும் துடுப்புகள் பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு கையாண்டு, பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஏடிஎஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி மணவாளன், தீயணைப்பு துறை ஆய்வாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags:    

Similar News