ஜெயங்கொண்டம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

இடங்கண்ணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.

Update: 2022-05-14 07:33 GMT

ஜெயங்கொண்டம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரியலூர்- ஜெயங்கொண்டம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து வழிபட்டனர்.

கடந்த வாரம் தீமிதி திருவிழாவை முன்னிட்டு திரௌபதி அம்மனுக்கு நான்கு புறங்களிலும் உள்ள எல்லை பகுதியில் காப்புகட்டி விரதமிருந்து பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இத்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளான தென்கச்சிபெருமாள் நத்தம்,அண்ணங்காரன் பேட்டை, கீழகுடிக்காடு, கூத்தங்குடி, சிந்தாமணி, தா.பழூர், காரைக்குறிச்சி, சோழன்மாதேவி, அனைக்குடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து தீமிதி திருவிழா கண்டு தரிசனம் செய்து சென்றனர். இத்திருவிழாவில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க தடுப்பு வேலிகளை அமைத்து தா.பழூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News