அண்ணாமலையை கண்டித்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி புகார்

பறையர் என்றால் இழிவானது என டுவிட்டரில் பதிவு செய்த அண்ணாமலையை கண்டித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் விசிக புகார்

Update: 2022-06-03 11:54 GMT

அண்ணாமலையை கண்டித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி புகார்

பறையர் என்றால் இழிவானது என டுவிட்டரில் பதிவு செய்த அண்ணாமலையை கண்டித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி புகார் அளித்தனர்.

பறையர் என்றால் இழிவானது எனவும், விஸ்வ குரு என்றால் மேலானது என்கிற விதமாக ஒப்பீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவு பதிவு செய்துள்ளது கண்டிக்கதக்கது. இதனால் பட்டியல் இன மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளதாகவும், இது திராவிடத்தின் முன்னோடிகளை அவமதிக்கும் பதிவாகும். எனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் புகார் செய்துள்ளனர். இதில் மாநில துணைச்செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News