ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ்டெப்போ மெக்கானிக் முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை

ஜெயங்கொண்டம் - அரசு பஸ் டெப்போ மெக்கானிக் மர்மமான முறையில் முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-16 18:15 GMT

ஜெயங்கொண்டம் அருகே முந்திரி தோப்பில் அரசு டிப்போ மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (50). இவருக்கு சுமதி என்ற மனைவியும்,ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இவர் ஜெயங்கொண்டம் அரசு பேருந்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இன்று ஜெயங்கொண்டத்தில் உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே தனியார் ஐடிஐ பின்புறம் முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு இருந்த ரவியின் உடல் சடலமாக மீட்ககப்பட்டது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

கொலையா? தற்கொலையா? என ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News