50க்கும் மேற்பட்ட மாணவிகள் நர்சிங் உறுதி மொழி ஏற்றனர்

செவிலித்தாய் நைட்டிங்கேல் அம்மையாருக்கு நன்றி தெரிவித்து 50க்கும் மேற்பட்ட மாணவிகள் நர்சிங் உறுதி மொழி ஏற்றனர்.;

Update: 2021-03-31 08:50 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரிகள் முதலாம் ஆண்டு நர்சிங் மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் பயிற்சி செல்வதற்கு முன்பு தீப ஒளி ஏற்றி பரப்ரம்மம் இறைக்கும், செவிலித்தாய் நைட்டிங்கேல் அம்மையாருக்கும் நன்றி தெரிவித்து நர்சிங் உறுதி மொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பரப்ரம்மம் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், இயக்குனர் சுரேஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பொருப்பு முனைவர் ராஜமூர்த்தி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை செவிலியர் மலர்விழி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாதவன், பேராசிரியர் கோடிதுரை, மாரநாதா சர்ச் பாஸ்டர் செல்வராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக நர்சிங் முதல்வர் விமலா வரவேற்றார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியில் நர்சிங் கல்லூரி தாளாளர் உஷா முத்துக்குமரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News